திருப்பூர் ராஜகணபதி கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED :2999 days ago
திருப்பூர்: திருப்பூர், ஜெ.ஜி.,நகர், ராஜகணபதி கோவிலில் எழுந்தருளியுள்ள,ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 20ல் துவங்கியது. தினமும், 16 திரவியங்களில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சஷ்டி விழா நிறைவாக, சூரனை வதம் செய்யும், சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, அபிஷேகம், தீபாராதனை, சுவாமிக்கு திருக்கல்யாண உற் சவம் நடந்தது. இதில், ஏரா ளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.