மயிலம் அரங்கநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :2998 days ago
மயிலம்: மயிலம் அரங்கநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மயிலத்தில் உள்ள பழமை வாய்ந்த அரங்கநாத சுவாமி கோவில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி மயிலம் திருமடத்திலுள்ள பாலசித்தருக்கு அனுக்ஞை, விப்ரானுக்ஞை நடந்தது. மறுநாள் மயிலியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், 25ம் தேதி காலை கோ-பூஜையும், மாலை இரண்டாம்கால பூஜையும், 26ம் தேதி யாகசாலை பூஜையும் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து காலை 8:15 மணிக்கு, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது.