எழிலரசி மாரியம்மன் கோவிலில் வரும் நவ.,1ல் கும்பாபிஷேகம்
ADDED :2987 days ago
ஈரோடு: எழிலரசி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. பவானி அருகே, தளவாய்பேட்டையில், எழிலரசி மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, வரும் நவ.,1ல் நடக்கிறது. கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகள், அக்.,30ல் தொடங்குகிறது, 31ல் இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நவ.,1ல் காலை, 8:00 மணிக்கு யாக சாலையில் இருந்து, கலச புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து, 9:30 மணிக்கு, மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் விமானங்களுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, கோவில் விழா கமிட்டியார் அழைப்பு விடுத்துள்ளனர்.