ரிஷிவந்தியம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3295 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த வேளானந்தலில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி காலை கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. மறுநாள் சந்திர சூரிய பூஜை, மண்டப பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை யாக சாலை பூஜைகள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, காலை 9:00 மணியளவில், கும்பாபிஷேகம் நடந்தது.