பசுமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2938 days ago
செஞ்சி: மேல்ஒலக்கூர் பசுமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, மேல்ஒலக்கூர் பசுமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 19ம் தேதி 25 அடி உயர சக்திவேல் பிரதிஷ்டையுடன் துவங்கியது. அன்று பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, சக்திவேலுக்கு அபிஷேகம் செய்தனர். மறுநாள், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 25ம் தேதி கந்தசஷ்டி விழா நிறைவு விழாவும், 26ம் தேதி இரவு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மற் றும் சக்திவேல் உபயதாரர் அண்ணாதுரை, விழா குழுவினர் ராஜசேகர், ராமமூர்த்தி செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.