ரிஷிவந்தியம் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2939 days ago
தியாதுகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமிக்கு, கடந்த 20 ம்தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. கடந்த 23ம் தேதி பச்சை சாற்றுதலும் அடுத்த நாள் நவவீரர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 25 ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நாகராஜ் குருக்கள், பூஜைகளை செய்தார். செங்குந்தர் சமூகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைந்தது.