உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளூர் ஐயப்பன் கோயில்களில் மாலையை கழற்றும் பக்தர்கள்!

உள்ளூர் ஐயப்பன் கோயில்களில் மாலையை கழற்றும் பக்தர்கள்!

கூடலூர் : தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களை நிலக்கல், வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் கேரள கும்பல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால், தமிழக ஐயப்ப பக்தர்கள் கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டி சபரிமலை அடிவார ஐயப்பன் கோயிலில், பேட்டை துள்ளி விட்டு, அருகில் உள்ள பெரியாற்றில் குளித்து, கோயிலில் 18ம் படியேறி நெய் அபிஷேகம் செய்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, இருமுடி செலுத்தி, விரதத்தை முடித்து ஊர் திரும்புகின்றனர். பக்தர்கள் அனைவருக்கும் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே போல் காமயகவுண்டன்பட்டி அருகில் சண்முகநாதர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயில், உத்தமபாளையம் அருகே சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில், உட்பட உள்ளூர் ஐயப்பன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்து,மாலையை கழற்றி விரதத்தை முடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !