டிசம்பர் 17 முதல் திருமலையில் திருப்பாவை!
ADDED :5053 days ago
திருப்பதி: தனுர் மாதத்தையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலில் வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை திருப்பாவை பாடப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய திருப்பாவை, ஒவ்வொரு தனுர் மாதமும் அதிகாலையில் சுப்ரபாதத்திற்கு பதிலாக பாடப்படும். இச்சேவையை காண பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 15ம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் துவங்கும்.