உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி, ’ரோப் கார்’ இன்று முதல் இயக்கம்

பழநி, ’ரோப் கார்’ இன்று முதல் இயக்கம்

பழநி: பராமரிப்பு பணிகள் முடிந்து, பழநி முருகன் கோவிலில், ’ரோப் கார்’ இன்று முதல் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. பழநி மலைக்கோவிலுக்கு, செல்லவும், கீழே இறங்கவும், காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ’ரோப் கார்’ இயங்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக, செப்., 12ல் நிறுத்தப்பட்டது. மூன்று நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. அதில், பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, 7:00 மணி முதல், பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !