சீர்ப்பனந்தலில் கும்பாபிஷேகம்
ADDED :2933 days ago
ரிஷிவந்தியம்: சீர்ப்பனந்தல் பாலசுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில், பழமை வாய்ந்த பாலசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 27ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 28ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும், திருவிளக்கு பூஜையும், 29ம் தேதி பிரம்மச்சாரி, கன்யா, வடுக, தம்பதி பூஜைகள் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 9:00 மணியளவில் கோ-பூஜை நடந்தது. தொடர்ந்து 10:00 மணியளவில், கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் நடந்தது.