நாகேஸ்வரர் கோவிலில் 3ல் அன்னாபிஷேகம்
ADDED :2933 days ago
எலச்சிபாளையம்: பெரியமணலி நாகேஸ்வரர், சிவகாமி அம்மை கோவிலில், வரும், 3ல் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில், நாகேஸ்வரர், சிவகாமி அம்மை கோவிலில், வரும், 3ல் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. காலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, 9:00 மணிக்கு புனிதநீர் கொண்டு வருதல், மதியம், 1:00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுடன், திருமுறை பாராயணம், மாலை, 4:00 மணிக்கு அன்னாபிஷேகம், 6:30 மணிக்கு, சுவாமிகளின் திருத்தேர் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, பிரதோஷ அறக்கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.