உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய நாயகியம்மன் கோயிலில் நவ.24ல் கும்பாபிஷேகம்

பெரிய நாயகியம்மன் கோயிலில் நவ.24ல் கும்பாபிஷேகம்

பழநி: பழநியில் பெரியநாயகியம்மன் கோயிலில் நவ.,24ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. பழநி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. பாண்டியர், சேரர் கால மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ. 90லட்சம் செலவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இதில் கிரானைட் தளம் அமைத்தல், கோயில் கற்சிலைகள், ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளைமுடிந்துள்ளது. இதனையடுத்து நவ.,24ல்கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக இன்று காலை 9:00மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !