உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் நடை அடைப்பு!

பழநி கோயிலில் நடை அடைப்பு!

பழநி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பழநி கோயில் சன்னதி, இன்று மாலை 4 மணி முதல் இரவு 9.47 மணி வரை, அடைக்கப்படும். இன்று மாலை 6.14 மணிக்கு துவங்கி இரவு 9.47 மணி வரை, சந்திர கிரகணம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை நடைபெற்று, மலைகோயில் சன்னதி, திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிகள் அடைக்கப்படும். இரவு 9.47 மணிக்கு புனித நீர் தெளித்து ராக்கால பூஜை நடைபெறும். பழநி கோயிலில் தங்கரத புறப்பாடு கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !