உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், 19 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஐப்பசி மாத அமாவாசை முடிந்து, உண்டியல் கள் நேற்று திறக்கப்பட்டன.

கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் செலுத் தியிருந்த காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

இதில், ரூ.19 லட்சத்து 15 ஆயிரத்து 12 ரொக்கம், தங்க நகைகள் 118 கிராம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் 108 கிராம் ஆகியவற்றை, பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், மணி, சரவணன், சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !