உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டியில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை

சின்னாளபட்டியில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை

சின்னாளபட்டியில்: ஐயப்பன் சுவாமி பஞ்சலோக சிலை பிரதிஷ்டை விழா நடந்தது.
கீழக்கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறத்தில், சித்திவிநாயகர் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது.

இங்கு, விநாயகர், முருகன், அய்யப்பன் சிலைகள் பிரதிஷ்டை விழா, நவ. 1ல் துவங்கியது. முன்னதாக, விரதமிருந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்குடங்கள் அழைப்புடன் துவங்கிய விழாவில், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலுடன்
விநாயகர், முருகன் சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.

வெள்ளிக்கிழமை, மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, சரணகோஷம் முழங்க ஐயப்ப சுவாமியின் பஞ்சலோக சிலை பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நெய், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !