/
கோயில்கள் செய்திகள் / கீழக்கரை உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
கீழக்கரை உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :2932 days ago
கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது.
காலை 11:00 மணிக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. 51படி அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு, மங்களநாதர் சிவலிங்கத்தின் மீது அன்னத்தால் சாத்தப்பட்டது. காய்கறி கள், பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, நாமஜெபம், பாராயணம் நடந்தது.