உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டியில் செயல்களில் வெற்றிதரும் விநாயகர் கல்கோயில்

ஆண்டிபட்டியில் செயல்களில் வெற்றிதரும் விநாயகர் கல்கோயில்

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் கல்கோயில் என்றழைக்கப்படும் ராஜ விநாயகர் கோயில்
கட்டப்பட்டு 150 ஆண்டுகளை கடந்துள்ளது. ஆரம்ப காலத்தில் வெளியூரில் இருந்து வழி தவறி
வந்தவர்கள். வழிப்போக்கர்கள் இரவில் தங்கி சென்றனர். வெளியூர்களில் இருந்து வந்த இயலாதாருக்கு கோயில் சார்பில் உணவும் அளித்து வந்தனர். தகவல் தொடர்பு இல்லாத பழமையான காலத்தில் ஊர் மக்கள் இரவில் கோயில் வளாகத்தில் கூடி நாட்டு மற்றும் ஊர் நடப்புகள் குறித்த தகவல்களை பரிமாறி வந்தனர். தற்போதும் இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்கள். சுபகாரியங்கள் ஆகியவற்றிற்கு இங்குள்ள விநாயகரை முதலில் வணங்கி பணியை துவக்குகின்றனர். கோயில் குறித்து இதன் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஏ. சங்கரே ஸ்வரன் தெரிவித்ததாவது:

தரை தளம் முதல் சுவர் வரை அனைத்தும் கற்களால் கட்டப்பட்டதால், கல்கோயில் என்ற ழைக்கப்பட்டு வருகிறது.

வெளியூரில் இருந்து வழி தவறி அடைக்கலம் இன்றி வந்தவர்களை, கல்கோயிலுக்கு செல்லும்படி இப்பகுதியில் அனுப்பி விடுவர். கோயில் பராமரிப்பில் இருந்த தன்னார்வலர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஊர் முழுக்க அன்னக்காவடி சுமந்து, உணவு சேகரித்து வழி தவறி வந்தவர்களுக்கு வழங்குவர். இயலாதவர்களுக்கு திரும்ப ஊர் செல்வதற்கான போக்குவரத்து செலவுக்கும் உதவி செய்தனர். இங்கு வந்து சென்று யாரையும் பசியுடன் திரும்பி செல்ல விடுவதில்லை.

ஆன்மிகத்துடன் மனித நேயத்தையும் வளரச் செய்து வந்தனர்.

கடந்த பல ஆண்டுக்கு முன் குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம், திருவண்ணாமலை ஆன்மிக திருக்கூட்டத்தினர் இங்கு வந்து சென்ற சிறப்பும் பெற்றுள்ளது.

தற்போதும் ஊர் வழக்கப்படி அனைவரும் ஒன்று கூடி அந்தந்த கால கட்டத்தில் நடைபெறும்
விழாக்களை நடத்தி விநாயகரை வழிபடுகின்றனர். இதனால் அவர்களில் செயல்களில் வெற்றி கிடைக்கிறது. என்றார். கல்கோயில் குறித்த தொடர்புக்கு 99448 52665


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !