உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் எடுத்தால் வீடு கட்டலாம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் எடுத்தால் வீடு கட்டலாம்

ஸ்ரீவில்லபுத்தூர்: ஸ்ரீவில்லபுத்தூரில் வெட்டிய கிணறும், கட்டிய வீடும் யோகவான்களுக்கு தான் கிடைக்கும் என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு வீடு கட்டுவது என்பது இன்று மிகவும் சிரமமான காரியமாக மாறிவருகிறது. என்னதான் பணம் கையிருப்பு இருந்தாலும், நினைத்தவுடன் வீடு கட்ட எல்லோராலும் முடியாது. அதற்குரிய நேரகாலங்கள், கிரக சூழ்நிலைகள், நல்ல நேரம் என பல காரணங்கள் கைகூடி வந்தால் தான் நினைத்த காரியம் நிறைவேறும்.

ஆனால், அதையும் மீறி தெய்வ அருள் கிடைத்தால் மட்டுமே தங்கு தடையின்றி வீடு கட்ட முடியும் என்பதே பலரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை வேற்றும் விதமாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர நந்தவனத்தில் இருக்கும் துளசிமாடம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து வெற்றி பெற்றவள் ஆண்டாள். அந்த ஆண்டாள் கண்டெடுக்கபட்ட பசுமை சோலையில் ஆண்டாளை வணங்கி அர்ச்சனை செய்து எதிரே இருக்கும் துளசி மாடத்தில் மண் எடுத்து அதை தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தோ, வீட்டில் சுவாமி படங்களுக்கு முன்வைத்தோ தினமும் வணங்கி வந்தாலோ, லட்சுமி கடாட்சம் பெருகி எந்தவித தடையும் இல்லாமல் எளிதில் வீடு கட்டி குடிபுகும் நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, பலரின் அனுபவ உண்மை.

இன்றும் ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், ஆடி மாதம் தேரோட்ட உற்ஸவம், பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் போன்ற திரு விழாக்களில் இங்கு மண் எடுத்து பூஜை செய்தபின்னர் தான் திருவிழாக்கள் துவங்குகிறது. அந்தளவிற்கு எடுத்த காரியம் செவ்வனே நடந்து. நல்லபடியாக நிறைவேறுகிறது. ஆண்டாள் துளசி மாடத்தில் மண் எடுத்தால், வாழ்வில் ஒவ்வொருவரும் வீடுகட்டும் பாக்கியம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !