திருவெற்றியூரில் அனைத்து மதத்தினரும் வணங்கும் அன்னை ஆலயம்
திருவாடனை: திருவாடனை அருகே திருவெற்றியூரில் ஏழைகளின் அன்னை ஆலயம் உள்ள து. இந்த ஆலயம் முன்புள்ள கோபுரம் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் அமைக்க ப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஆகஸ்ட்டில் திருவிழா நடைபெறும், அப்போது ஆலயம் வண்ண மின் விளக் குளால் அலங்கரிக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
திருவெற்றியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் விழா வில் கலந்து கொண்டு, ஏழைகளின் அன்னையை வணங்குவார்கள்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் ஏராளமான ஏழைவிவசாயிகள் உள்ள னர். அனைத்து மதத்தினரும் அன்னையை வழிபடுவோம்.
வாழ்வில் ஏற்படும் தடங்கள், குடும்ப பிரச்சனை குறித்து அன்னையை நினைத்து வழிபடும் போது தீராத பிரச்னைகளாக இருந்தாலும் உடனே தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், என்றனர்.
திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம் பிரியாள் கோயில் உள்ளது.
சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாவில் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதாயத்திரையாக செல்வார்கள் அப்போது இந்த ஆலயத்தில் ஓய்வெடு த்து கோயிலுக்கு செல்வது வழக்கம்.
திருவாடனையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை நாமும் சென்று வழிபடலாம்.