உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 1 ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால பூஜை  நடந்தது.2 தேதி காலை பூர்ணாகுதி, தீபஆராதனை, 2ம் கால பூஜைகள் நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகத்திற்காக புனித நீர்அடங்கிய கலசங்களை சிவாச் சாரியார்கள் காலை 9:00 மணிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களில் ஊற் றினர்.

பின்னர் செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.

இளையான்குடி: இளையான்குடியில் உள்ள மேலாயூரில், குருவாயூர் அமைப்பில்  புதிதாக உருவாக்கப் பட்டுள்ள  ஸ்ரீகண்ணன்கோயில் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து வியாழக்கிழமை 2வது காலயாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொட ர்ந்து வெள்ளிக்கிழமை  காலை 10:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.   விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !