உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நந்தி சிலை கண்டெடுப்பு

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நந்தி சிலை கண்டெடுப்பு

மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் நடந்த துாய்மை பணியின் போது புதைந்திருந்த  நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியை கேந்திர தொண்டர்கள் சுத்தப்படுத்தினர். குளத்தை துார் வாரிய போது புதைந்திருந்த  ஒன்றரை டன் எடையுடன், இரண்டு அடி உயரமுள்ள நந்தி சிலை எடுக்கப்பட்டது.  இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜனுக்கு தெரிவிக்கப்பட்டது.  பத்தாண்டுகளுக்கு  முன் தெப்பக்குளத்திற்குள் சிலை புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கேந்திர மாவட்டத் தலைவர் சந்திரன், நகர் தலைவர் சீனிவாசன் தலைமையில் சேவா பாரதி நிர்வாகிகள் வைகுண்டராஜன், ஜெயபாலன் மற்றும் பலர் இப்பணியில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் கூறியதாவது: தொடர்ந்து தெப்பக்குளத்தின் அனைத்து பகுதிகளையும் துாய்மைப்படுத்தும் பணி நடக்கும். அதிகாரிகள் அனுமதிதந்தால் துார் வாரி, மைய மண்டபமும் அழகுபடுத்தப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !