உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி குரும்பபாளையத்தில், அம்மணீஸ்வரரை வணங்கினால் தீமை விலகும்; நல்லது நடக்கும்

பொள்ளாச்சி குரும்பபாளையத்தில், அம்மணீஸ்வரரை வணங்கினால் தீமை விலகும்; நல்லது நடக்கும்

பொள்ளாச்சி: பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில், பொள்ளாச்சி குரும்பபாளை யத்தில், ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அம்மணீஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோ வில், 800 ஆண்டுகள் பழமையானது.குரும்பபாளையத்தில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. சிவன் என்றாலே சுடுகாட்டை கட்டிக்காக்கும் ஈசன் என்பார்கள். இங்கும் சுடுகாட்டின் அருகிலே, மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கோவில் மண்ணை மிதித்து, சிவனை வழிபட்டாலே, பாவங்கள் கழிந்து விமோசனம் கிடைக் கும், நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் கிராம மக்கள். பழமையான இக்கோவிலுக்கு கோபுரம் இல்லை. ஆனாலும், அருகில் சிறுசிறு கோவில்கள் வேலைப்பாடுடன் காட்சி அளிக் கிறது.கோவிலில் லிங்க உருவத்தில் சிவன் அருள்பாலிக்கிறார். கோவில் தலவிருட்சமாக, வில்வமரம் உள்ளது. விநாயகர், துவாரபாலகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகத்திய முனிவர், சப்தகன்னிகள், காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு முன் நந்தி சிலை உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் குளித்து, சிவனை வழிபடுவது வழக்கம்.

தினமும் காலை, 10:00 மணிக்கு சிவனுக்கு சிறப்பு நெய் அபிேஷக ஆராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மட்டும் வழங்கப்படுகிறது. சிரம் தாழ்த்தி சிவனை நினைத் தாலே நல்லது நடக்கும், தீமைகள் விலகும், நினைத்ததும் வெற்றிகரமாக நடப்பதாக பக்தர்க ள் கூறுகின்றனர். பவுர்ணமி, அமாவாசை, மகாசிவராத்திரி, பிரதோஷம், உள்ளிட்ட சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !