பழநியில்,மழை பெய்தும் நிரம்பாத பழநி இடும்பன்குளம்
பழநிமுருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் இடும்பன்குளம் பராமரிப்பு இல்லாமல் பாழாகியுள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் சபரிமலை சீசன் போன்ற முக்கியமான சீசன் நேரத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
அவ்வாறு வருவோர் இடும்பன்குளத்தில் குளித்து, இடும்பனை வணங்கிய பின்பே, மலைக்
கோயிலில் முருகரை தரிசனம் செய்கின்றனர். இப்படி பாரம்பரியமிக்க புனித இடும்பன்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து பாழாகியுள்ளது.
சமீபத்திய நாட்களில் தொடர்ந்து மழைபெய்து வரதமாநதி அணை நிரம்பி அதன்மூலம் வை யாபுரிக்குளம், ஆயக்குடி குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் அவ்வழியில் உள்ள இடும்ப ன்குளத்திற்கு தனியாக நேரடிவாய்க்கால் வசதி இல்லாமல் மழைபெய்தும் நிரம்பவில்லை. எனவே, இடும்பன்குளத்தில் தண்ணீர் நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு வையாபுரிகுளத்து வாய்க்கால் ஏரனைப் பகுதியில் இருந்து இடும்பன்குளத்திற்கு
வாய்க்கால் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம்,
பங்குனி உத்திரம் விழாவில் குவியும் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக இருக்கும் என,
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.