திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.83 லட்சம்
ADDED :2930 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து நேர்த்திக் கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துவர். பணம், தங்கம், வெள்ளி, ஆகியவற்றை செலுத்துவர். மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து எண்ணப்படும். நேற்று கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில், சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 83 லட்சத்து, 3,861 ரூபாய், 169 கிராம் தங்கம், 613 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.