உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பையில் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை

பம்பையில் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை

சபரிமலை; பம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டத்தை அமல்படுத்தும் படி மாவட்ட எஸ்.பி.க்கு பத்தணந்திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் செய்யும் முக்கிய சடங்குகளில் ஒன்று பம்பைஆற்றில் குளியல் நடத்துவது, பம்பையில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஆனால் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பது, உள்ளாடைகள், மாலைகளை வீசி எறிவது, எச்சில் இலைகளை போடுவது போன்ற செயல்களால் பம்பை நதி அசுத்த மாகிறது. இதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றாலும் பக்தர்கள் போலீசின் கண்காணிப்பையும் மீறி ஆடைகளை விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த ஆண்டு பம்பையை சுத்தமாக பராமரிக்க பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பம்பை ஆற்றில் தடையை மீறி எண்ணெய், சோப்பு, ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு 6 ஆண்டு வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும், இதனை மாவட்ட எஸ்.பி. அமல்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !