உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய் பாபாவின் பாதுகைகள் முதன்முறை சென்னை வருகை

சீரடி சாய் பாபாவின் பாதுகைகள் முதன்முறை சென்னை வருகை

சென்னை : சீரடி சாய் பாபா பாதுகைகள், சென்னைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இதை, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி நுாற்றாண்டு, நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பாபாவின் பாதுகைகள், முதன் முறையாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.அவை, மயிலாப்பூர், பாபா கோவில் எதிரில் உள்ள, அகில இந்திய சாயி சமாஜத்தில், தரிசனத்திற்காக நேற்று மாலை வைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதை தரிசித்தனர்.பாபாவின் பாதுகைகள், இன்று காலை, 6:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது. பின், பாதுகைகள், மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !