உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சுனன் தபசு அகழியில் நீர் தேங்காததும் அதிசயம்

அர்ச்சுனன் தபசு அகழியில் நீர் தேங்காததும் அதிசயம்

மாமல்லபுரம் : அர்ச்சுனன் தபசு சிற்ப அகழியில், மழை நீர் தேங்காமல் இருப்பது, சுற்றுலா பயணியரை ஆச்சரியப்படுத்துகிறது. மாமல்லபுரம் கலைச்சின்னங்களில், அர்ச்சனன் தபசு சிற்பம் குறிப்பிடத்தக்கது. பாறைக்குன்றில், இறைவன், கங்கை நதி, யானை உள்ளிட்ட விலங்குகள் என, இச்சிற்பம் புடைக்கப் பட்டுள்ளது. நிலமட்டத்தின் கீழ் அமைந்துள்ள சிற்பத்தை காணும் வகையில், ஆழ அகழியாக தோண்டப்பட்டு, மண் சரிவை தடுக்க, கற்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. அகழி, ஆழமாக அமைந்தும், தற்போதைய மழைநீர் இதில் தேங்கவில்லை. மழைநீர் தேங்கினால், நிலத்தடி பகுதி சிற்பம் பாதிக்கப்படும். இதை தடுக்க, அகழியின் கீழ், சில அடி ஆழத்தில், செங்கல் துகள்கள், அதன் மேல் மணல் என, இரு அடுக்கு படுகை அமைக்கப்பட்டுள்ளது. படுகை வழியே செல்லும் மழைநீர், நிலத்தடி பகுதியில் ஊடுருவி, மேற்புறத்தில் தேங்குவதில்லை. இத்தகைய அகழியை காணும் சுற்றுலா பயணியர், கன மழையிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பார்த்து, ஆச்சரியமடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !