திருவண்ணாமலை தீப விழாவுக்கு 1,000 சிறப்பு பஸ்கள்
ADDED :2924 days ago
திருவண்ணாமலை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, 1,000 சிறப்பு பஸ்களை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர். திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, டிச.,2ல் நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு, நவ., 25 முதல், டிச., 5 வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, சேலம், விழுப்புரம் கோட்டங்களின் சார்பில், தலா, 300, கோவை கோட்டத்தில் இருந்து, 200, பிற கோட்டங்களில் தலா, 50 என, 1,000 சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. - நமது நிருபர் -