கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :2921 days ago
கம்பம், கம்பம் புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். கம்பம் புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில் அனுமந்தன்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்டதாகும். ஆண்டுதோறும் இரண்டு கிராமங்களிலும் ஒருவாரம் திருவிழா நடைபெறும். கடந்த எட்டு நாட்களாக புதுப்பட்டியில் கவுமாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. தினமும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மண்டகப்படி நடத்துகின்றனர். முளைப்பாரி,மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. இறுதிநாளில் ஒக்கலிக கவுடர் மகாஜனசங்கம் சார்பாக வண்டிவேஷம் நடந்தது. ஏராளமானோர் பல்வேறு வேடமணிந்து வந்தனர். தினமும் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.