ராமேஸ்வரம் கோயில் யானைகள் முதுமலை முகாமிற்கு பயணம்!
ADDED :5152 days ago
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் யானைகள் பவானி மற்றும் ராமலெட்சுமி முதுமலையில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமிற்கு இன்று செல்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெறாததால், ராமேஸ்வரம் கோயில் யானைகளுக்கு கோயிலிலேயே தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ராமேஸ்வரம் கோயில் யானை பவானியும் கோயிலுக்கு புதிதாக வழங்கப்பட்ட குட்டியானை ராமலெட்சுமியும், இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற பின், ராமேஸ்வரத்திலிருந்து இரண்டு வாகனங்களில் முதுமலை புறப்பட்டு செல்கிறது. உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகன் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.