புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
ADDED :2970 days ago
புதுச்சேரி: கோவில் திருப்பணிக்காக, தனது சொந்த செலவில் 50 ஆயிரம் ரூபாய் நிதியை, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார். லாஸ்பேட்டையில் உள்ள வீரபத்திரசுவாமி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது . இப்பணிகளுக்காக, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை, தனது சொந்த செலவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அறங்காவலர் குழுவினரிடம் வழங்கினார். அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் சுந்தரவேல், பொருளாளர் ராஜமாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திருமாறன், கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.