உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகியநல்லூர் கோவிலில் உழவாரப்பணி முகாம்

உலகியநல்லூர் கோவிலில் உழவாரப்பணி முகாம்

சின்னசேலம்: உலகியநல்லூர் கிராமத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் கிராமத்தில், 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அர்த்தநரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள், தட்சிணாமூர்த்தி, வினாயகர், விஷ்ணு, முருகன், வள்ளி, தெய்வயாணை, நவகிரகங்கள், சண்டீஸ்வரர், பைரவர், உள்ளிட்ட சுவாமிகளின் கற்சிலைகள் உள்ளன. பழமையான இக்கோவிலில், சென்னையை சேர்ந்த குளோபல் ஆர்கனைஷேசன் பார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் நிர்வாகி முருகதாஸ் தலைமையிலான குழுவினர், உழவார பணிகளை செய்தனர்.இவர்களுக்கு, சின்னசேலம் வியாபார சங்க பிரதிநிதிகள் செல்வம், ரங்கராஜா, வேல்மணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !