பழநியில் பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருப்பு
ADDED :3209 days ago
பழநி; பழநி மலைக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நேற்று ஞாயிறு பொதுவிடுமுறையில் மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ‛ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒருமணிநேரம் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.