உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி தாடகை மலை அடிவாரத்தில் உள்ள ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.விழாவையொட்டி, காலை, 11:00 மணி மற்றும் மாலை, 5:00 மணிக்கும் பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சமுக்தியாம்பிகை மற்றும் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !