திண்டுக்கல்லில் மலையாள சமாஜம் சார்பில் ஓணம் விழா
ADDED :2957 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மலையாள சமாஜம் சார்பில் ஓணம் விழா நடந்தது. செயலாளர் சுகுமாறன் வரவேற்றார். தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கென்னடி பள்ளி தலைவர் அப்துல் ரஜாக், ஓய்வு பெற்ற.டி.எஸ்.பி., நடராஜமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர் சுனோஜ், சி.டி.எம்.ஏ., செயலாளர் ஸ்ரீகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் கேரள பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டு வரவேற் றனர்.பெண்கள் கேரள நடமாடினர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வேணுகோபல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கருணா பிரசாத், துணை செயலாளர் கண்ணன் செய்திருந்தனர்.