நாமக்கல்லில் ஐப்பசி ஆன்மிக பெருவிழா
ADDED :2891 days ago
நாமக்கல்: நாமக்கல்லில், ஐப்பசி ஆன்மிக பெருவிழா நடந்தது. நாமக்கல், ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில், ஐப்பசி ஆன்மிக பெருவிழா நடந்தது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருளரசு துவக்கி வைத்தார். சென்னை, ஆன்மிக சொற்பொழிவாளர் ராமலிங்கம், பாரதம் காட்டும் பாரத பண்பாடு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் அரசுபரமேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.