திருவிதாங்கூர் தேவசம் போர்டு பதவிக்காலம் குறைப்பு
ADDED :2891 days ago
திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 வருடத்திலிருந்து 2 வருடமாக குறைத்து கேரள மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொண்டு வரப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த சட்டத்தை ஒப்புதலுக்காக கவர்னருக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்டம் குறித்து கவர்னர் சில சந்தேகங்கள் கேட்டிருந்தார். இதற்கு மாநில அரசு அளித்த விளக்கத்தை தொடர்ந்து, கவர்னர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.