புத்திரன் என்பதன் பொருள்!
ADDED :2921 days ago
ஒரு மனிதர் இறந்தபின் அவனது ஆன்மா நலம் அடைதற்பொருட்டு, அவனது மக்கள் முதலியோர் செய்யும் கிரியைக்கு அபரக்கிரியை என்று பெயர். அபரம் பிந்தியது, மக்கள் செய்யும் கிரியை இறந்தவனை ஈடேற்றுகின்றது. மகனைப் புத்திரன் என்பர். புத்திரன் என்பதற்கு புத்தென்னும் நரகத்தில் தந்தை விழாமல் கரையேற்றுபவன் என்பது பொருளாகும்.