பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.34கோடி
ADDED :2985 days ago
பழநி, பழநி முருகன்கோயில் உண்டியலில் 15 நாட்களில் ரூ. ஒரு கோடியே 34 லட்சத்து13ஆயிரம் கிடைத்து உள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 34லட்சத்து, 13ஆயிரத்து 644, தங்கம் - 545கிராம், வெள்ளி- 4,420 கிராம், வெளிநாட்டு கரன்சி- 640 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலை கணக்கீட்டாளர் மாணிக்கவேல், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.