கிருஷ்ணகிரி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்
ADDED :2889 days ago
கிருஷ்ணகிரி: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் ஐய்யப்ப பக்தர்கள், துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, 1ல், சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். நேற்று காலை, 5:00 மணிக்கு, சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். ஐயப்பன் கோவில் குருசாமி மனோஜ், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து, 45 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கியது. பின்னர், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டபக்தர்கள் பங்கேற்று, நேற்று மாலை அணிந்து கொண்டு, விரதத்தைத் தொடங்கினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயலாளர் வேணுகோபால் மற்றும் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.