அய்யப்ப பக்தர்களுக்கு குமுளியில் தகவல் மையம்
ADDED :2928 days ago
கூடலுார்: குமுளியில், சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக, தமிழக அறநிலையத்துறை சார்பில், தகவல் மையம் திறக்கப்பட்டது. சபரிமலைக்கு செல்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வருகின்றனர். இதில், கூடுதலான பக்தர்கள் அரசு பஸ்களில் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளிக்கு வந்து, பஸ் மாறி செல்ல வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்காக ஆலோசனை வழங்குவதற்காக, குமுளியில், தமிழக அறநிலையத்துறை சார்பில், தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, குமுளியில் இருந்து எரிமேலி, பம்பை, சபரிமலை மற்றும் தமிழகப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் விபரங்கள் கூறப்படும். மேலும், சபரிமலையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான விபரங்களையும் தெரிவிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.