உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு

பிள்ளையார்பட்டியில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோயில் நடை கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது. கார்த்திகை முதல் தேதி முதல் பழநி மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். பிள்ளையார்பட்டிக்கு பக்தர்களின் வருகைஅதிகரிக்கும். இதனையடுத்து வழக்கமாக கோயில் நடை கூடுதலாக திறக்கப்படும். இதுகுறித்து கோயில் அறங்காவலர்கள் கோனாபட்டு சுப.அருணாச்சலம் அரிமளம் நா.சிதம்பரம் ஆகியோர்அறிவித்துள்ளதாவது: வழக்கமாக மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். தற்போது முருகன் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பகல் நேரம் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இதனால் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் மேலும் கூடுதலாக நடைதிறக்கப்படும். தொடர்ந்து தை மாதம் வரைகூடுதல் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !