உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் காளியம்மன் கோவில் குடமுழுக்கு

ராசிபுரம் காளியம்மன் கோவில் குடமுழுக்கு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் காளியம்மனுக்கு டிச.,1ல், கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, வரும், 30 மாலை, 4:00 மணிக்கு, யானை, குதிரை ஊர்வலத்தோடு, வாண வேடிக்கையோடு பாட்டப்பன் கோவிலிலிருந்து, அம்மன் கோவிலுக்கு புறப்பாடு நடக்கிறது. டிச.,1 காலை, 9:30 மணிக்கு, ஆலய ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !