சீதா கல்யாண வைபோகமே பாடுவது ஏன்?
ADDED :2916 days ago
திருமணத்தில் சீதா கல்யாண வைபோகமே என பாடுவதில் வாழ்வின் ரகசியம் அடங்கியிருக்கிறது. சீதையின் மாமியார்களான கோசலை, சுமித்திரை ஒரே கருத்து உடையவர்கள். ஆனால் கைகேயி மகன் பரதனுக்காக, ராமரை காட்டுக்கு அனுப்பினாள். அந்த நிலையிலும் சீதை, ராமருக்கு கோபம் வரவில்லை. அரண்மனையில் வாழ்ந்த போதும், காட்டில் சிரமப்பட்டபோதும் இருவரும் மாறாத அன்பு கொண்டிருந்தனர். சூழ்நிலை மனிதனைப் பாதிப்பதில்லை என்பதற்கு இவர்கள் வாழ்க்கை உதாரணம். ராமன் இருக்கும் இடமே அயோத்தி என்று உடன் வந்தவள் சீதை. அந்த லட்சிய தம்பதி போல, மணமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நலுங்கின் போது இப்பாடலை பாடுகின்றனர்.