மதுரை சிருங்கேரி மடத்தில் சிராத்தபவன் திறப்பு
ADDED :2987 days ago
மதுரை, மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பித்ரு காரியம் செய்யக் கூடிய சிராத்தபவன் மண்டபம் திறப்பு விழா நடந்தது. நிர்வாகி கவுரிசங்கர் திறந்து வைத்தார். ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமி, ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமி கட்டளைப்படி, மடத்தில் பித்ருக்களின் ஆண்டு திவசம், மகாளய பூஜை செய்ய வசதியாக இம்மண்டபம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் எட்டு பேர் பித்ரு காரியம் செய்யலாம். திறப்பு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சங்கரநாராயணன், சீனிவாச ராகவன் செய்திருந்தனர்.