பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் நாளை( நவ.,24ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. தைசப்பூச விழா நடைபெறும் பழநிமுருகன் கோயில் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.96லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தது. நவ.,24ல் கும்பாபிஷேக நடத்துவதற்காக நவ.,2ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நவ.,20ல் கணபதிபூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, 130 சிவாச்சாரியார், சென்னை. மும்பையைச் சேர்ந்த நான்கு வேதம்ஓதும் வல்லுனர்கள் மூலம் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ஒவ்வொரு கால பூஜைக்கும் 135 தட்டு பழங்கள், நவதானியங்கள் உள்ளிட்டவை யாககுண்டத்தில் இட்டு ஆறுகால யாகசாலை பூஜை நடக்கிறது. நேற்றுமுதல் சன்னதிகள் நடைசாத்தப்பட்டு உட் பிரகாரத்தில் திருப்பணிகள் நடக்கிறது. இன்று சுவாமி சிலைகளுக்கு மருந்து சாற்றுதல் நடக்கிறது.
நாளை கும்பாபிஷேகம்: நாளை (நவ.,24ல்) காலை 6:15 - 7:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு கைலாசநாதர், பெரியநாயகியம்மன் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்மேனகா செய்கின்றனர்.