சாய்பாபா அவதார திருவிழா ஊர்வலம்
ADDED :2893 days ago
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, சத்ய சாய்பாபா சமிதியில், அவரது, 92வது அவதார திருவிழா, நேற்று முன்தினம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாலை, மங்கள நாதஸ்வர இசை, பாபாவின் உருவப்படம், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது. சமிதியில் தொடங்கிய ஊர்வலம், முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோவில், சின்னக்கடை வீதி வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, பிரசாந்தி கொடியேற்றம், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், கலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, ஊஞ்சல் பாடல், சிறப்பு சாயி பஜன், சொற்பொழிவு, மகா மங்கள ஹாரத்தி, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.