பழனியாண்டவர் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு
ADDED :2987 days ago
வத்திராயிருப்பு, எஸ்.ராமச்சந்திரபுரம் பழனியாண்டவர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆதிசிவன் சன்னதியில் 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. இதையொட்டி காலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் 108 சங்குகள், பூரண கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சகஸ்கரநாம வழிபாடும் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு ஐம்பொன் கவசம் சாத்தப்பட்டு பூஜைகளும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகஸ்தர்கள் அய்யனார்,செந்திலாண்டவன் ஏற்பாடுகளை செய்தனர்.