குபேர கணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2890 days ago
ஜலகண்டாபுரம்: குபேர கணபதி கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த, சூரப்பள்ளி சோரையான்வலவு குபேர கணபதி ஆலய மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, 16ல், பாலிகை போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இரவு, முதற்கால யாக பூஜை, நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளானோர், சுவாமி தரிசனம் செய்தனர்.