உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்ற 2,250 கிலோ நெய் வந்தது

திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்ற 2,250 கிலோ நெய் வந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றுவதற்காக, முதல் கட்டமாக, வேலூர் ஆவின் நிர்வாகம், 2,250 கிலோ நெய்யை கோவிலுக்கு அனுப்பியுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 29ல் மஹாரத தேரோட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து, டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, வேலூர் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து, 3,500 கிலோ நெய்யை, கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, நேற்று, 2,250 கிலோ நெய், அருணாசலேசுவரர் கோவிலிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த நெய் டின்களுக்கு, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். மேலும், 1,250 கிலோ நெய், இன்று கொண்டு வரப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !